மருமணத்திற்கு தயாராகும் இசையமைப்பாளர் !

இசையமைப்பாளர் D. இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் கிருஷ்ணா தாசி ,சிகரம் ,கோலங்கள் , அகல்யா ,கல்கி , கலசம் , திருமதி செல்வம் , உறவுகள் என சின்னத்திரை தொடர்களுக்கு இசையமைத்து உள்ளார். காதலே சுவாசமே என்கிற படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியானது ஆனால் படம் வெளியாகவில்லை . இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவான தமிழன் என்கிற என்ற படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தது .

இதன் பிறகு இவர் பல படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் 2012 -ஆம் வெளியான கும்கி படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடனும் , இயக்குனர்களுடனும் பணியாற்ற தொடங்கினர்.

D. இமான் 2008-ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் . இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் D. இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . இவர்களது விவாகரத்து செய்தி பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது .

இந்நிலையில் D. இமான் தற்பொழுது அடுத்த திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது . வருகின்ற 15-ஆம் இந்த திருமணம் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது .

Share.