“ஒரு டியூன் மட்டும் தான் கொடுப்பேன்”… டாப் இசையமைப்பாளரால் கடுப்பான இயக்குநர்!

தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் அந்த இளம் இசையமைப்பாளர். டாப் ஸ்டாரின் உறவினரான இவர், டாப் ஸ்டாரின் மருமகன் ஹீரோவாக நடித்த நம்பர் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இவரை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸாக்கியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகைக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியதும் இந்த இசையமைப்பாளர் தானாம். நம்பர் படத்துக்கு பிறகு இவர் இசையமைத்த பல பாடல்கள் ரசிகர்களை லைக்ஸ் போட வைத்ததால் டக்கென டாப் இசையமைப்பாளர்களின் லிஸ்டில் இடம்பிடித்து விட்டார்.

இந்நிலையில், டாப் ஹீரோவும், அவரது மகனும் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். ஆனால், பல படங்களில் பிஸியாக பணியாற்றி வருவதால், ஒவ்வொரு பாடலுக்கும் முதலில் போடும் ஒரு டியூன் மட்டும் தான் கொடுப்பேன், அது செட் ஆனாலும் ஆகா விட்டாலும் அதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அப்படத்தின் இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார் இசையமைப்பாளர். இதனால் கடுப்பான இயக்குநர், இவரை படத்திலிருந்து நீக்கிவிட்டு வேறு ஒரு பிரபல இசையமைப்பாளரை கமிட் செய்து விட்டார்.

Share.