திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் ஹரி!

‘சாமி, கோவில், ஐயா, தாமிரபரணி, வேல், சிங்கம் 1, 2, 3’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கி வரும் பாப்புலர் இயக்குநர் ஹரி. இப்போது ஹரி இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார்.

மேலும், முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராமச்சந்திர ராஜு, ராதிகா, ஜெயபாலன், தலைவாசல் விஜய், அம்மு அபிராமி, ராஜேஷ், இமான் அண்ணாச்சி நடித்து வருகிறார்கள். இப்படத்தினை ‘டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில், பழனியில் ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்த போது, ஹரி இயக்கி வந்த புதிய படத்தின் டீமில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தான் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறியுள்ளனர். ஆனால், ஹரிக்கு கொரோனா டெஸ்ட் எடுத்து பார்த்ததில் நெகட்டிவ் என்று தான் வந்துள்ளதாம். மேலும், படக்குழுவினரில் உள்ள 20 பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share.