விஜய் – வம்சி கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 66’யில் இணைந்த பிரபல இயக்குநர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். கடந்த ஜூன் 21-ஆம் தேதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. சமீபத்தில், இந்த படத்தின் செகண்ட் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்தது. இப்போது 3-வது ஷெடியூல் ஷூட்டிங் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெற்று வருகிறது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார். இந்த படத்துக்காக நடிகர் விஜய்-க்கு ரூ.120 கோடி (தமிழ் மார்க்கெட்டிற்கு – ரூ.80 கோடி + தெலுங்கு மார்க்கெட்டிற்கு – ரூ.40 கோடி) சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தற்போது, இப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு வசனம் எழுத ‘ஜோக்கர்’ பட இயக்குநர் ராஜு முருகன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, வம்சி தமிழில் இயக்கிய ‘தோழா’ படத்துக்கும் ராஜு முருகன் வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.