டென்ஷனாகி திட்டிய தயாரிப்பாளர்… ஆந்தாலஜி வெப் சீரிஸிலிருந்து விலகிய இயக்குநர்!

ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து வெப் சீரிஸ் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒவ்வொரு எபிசோடிலும் குறும்படம் போல் சொல்லப்படும் வெப் சீரிஸ்களும் உண்டு. அது ஆந்தாலஜி வெப் சீரிஸ் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி வெப் சீரிஸ்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.

தற்போது, தமிழில் டாப் இயக்குநர் ஒருவர் தயாரித்து வரும் புதிய ஆந்தாலஜி வெப் சீரிஸில் ஒன்பது குறும்படங்கள் இருக்கிறதாம். 8 பிரபல இயக்குநர்களும், ஒரு பிரபல நடிகரும் ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்குகின்றனர். இதில் ஒரு இயக்குநர் டிவி டு சினிமா வந்து டாப் ஹீரோக்களின் லிஸ்டில் இடம்பிடித்த ஹீரோவை வைத்து ஏற்கனவெ மூன்று படங்களை கொடுத்தவர்.

அதில் இரண்டு படங்கள் சூப்பர் ஹிட்டானது, ஒரு படம் ஃப்ளாப்பானது. இப்போது, இந்த ஆந்தாலஜி வெப் சீரிஸில் அந்த இயக்குநர் இயக்கிய குறும்படத்தை போட்டு பார்த்திருக்கிறார் தயாரிப்பாளர். அந்த குறும்படம் மீதியுள்ள 8 குறும்படத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் ரொம்ப சுமாராக இருந்ததாம். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் டென்ஷனாகி அந்த இயக்குநரை திட்டி விட்டாராம். பின், அந்த இயக்குநர் கடுப்பாகி இந்த வெப் சீரிஸிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு முன்னணி ஹீரோவை வைத்து ஒரு படத்தை இயக்க கிளம்பி விட்டாராம்.

Share.