சம்பளத்தை உயர்த்திய டாப் ஹீரோ… ஷாக் மோடில் தயாரிப்பாளர்கள்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த நடிகர். திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என்ட்ரியான இந்த நடிகருக்கு ஆரம்பத்தில் சின்ன ரோல் தான் சில படங்களில் கிடைத்தது.

அதன் பிறகு ஹீரோவாக அசத்தி டாப் ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து விட்டார். சமீபத்தில், டாப் ஹீரோவின் தமிழ் படம் மற்றும் புதுமுகங்கள் நடித்த தெலுங்கு படத்திலும் இந்த ஹீரோ வில்லனாக மிரட்டியிருந்தார். இதனால் இவருக்கு பல தெலுங்கு படத்தில் இவரை ஒப்பந்தம் செய்ய சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆசைப் படுகிறார்கள்.

ஆனால், அந்த நடிகரோ தனது சம்பளத்தை டக்கென உயர்த்தி விட்டாராம். ஒரு நாளைக்கே ரூ.1 கோடி கேட்கிறாராம். இதனால் டோலிவுட் தயாரிப்பாளர்கள், திறமையான அந்த ஹீரோ இந்த அளவுக்கு சம்பளத்தை உயர்த்துவார் என எதிர்பார்க்கவே இல்லை என்று புலம்பிய வண்ணமுள்ளனர்.

Share.