கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்… தயாரிப்பாளருக்கு ரெட் சிக்னல் கொடுத்த நடிகை!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த நடிகை. இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்தின் டைட்டில் தான் வேறமாதிரி ஆனால், படம் பரபரப்பான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் தான். இந்த படத்தில் அந்த நடிகையின் நடிப்பு அதிக கவனம் ஈர்த்தது.

அதன் பிறகு டாப் ஸ்டாரின் மருமகன் ஹீரோவாக நடித்த படத்தில் சின்ன ரோலில் வந்தாலும், அந்த கேரக்டருக்கு அதிக லைக்ஸ் போட்டார்கள் ரசிகர்கள். பின், தமிழில் நடித்த ஒரு படம் சரியாக போகாததால் தெலுங்கு திரையுலகில் என்ட்ரியானார் அந்த நடிகை. தெலுங்கில் இதுவரை ஆறு படங்களில் நடித்து விட்டாலும், இன்னமும் டாப் ஹீரோயின்களின் லிஸ்டில் இந்த நடிகையால் இடம்பிடிக்க முடியவில்லை.

பின், தமிழில் ஒரு பிரபல இசையமைப்பாளர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் பல சிக்கலால் சிக்கி தவிக்கிறது. சமீபத்தில், இந்த நடிகையை ஒரு பிரபல தயாரிப்பாளர் சந்தித்து “ஒரு புதிய தமிழ் படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் படு கவர்ச்சியாக நடிக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த நடிகையோ கோடி ரூபாய் கொடுத்தாலும் படு கவர்ச்சியான ரோலில் நான் நடிக்கவே மாட்டேன் என அந்த தயாரிப்பாளருக்கு ரெட் சிக்னல் கொடுத்து விட்டாராம்.

Share.