ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா நடிக்கும் படம்… ஒப்பந்தமான பிரபல இசையமைப்பாளர்!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது.

இப்போது, நடிகர் விஷால் நடிப்பில் ‘சக்ரா, துப்பறிவாளன் 2’ மற்றும் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்துக்கான ஷூட்டிங் நேற்று (அக்டோபர் 16-ஆம் தேதி) முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் ஃபேமஸான மிருணாளினி ரவி நடிக்கிறார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஆர்யா நடிக்கிறார். இதனை வினோத் குமார் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறாராம். தற்போது, படத்துக்கு இசையமைக்க தமன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.