பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் – முன்னணி தெலுங்கு ஹீரோ காம்போவில் உருவாகும் புதிய படம்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் ரெடியாகி வரும் புதிய படமான ‘இந்தியன் 2’வில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்கிறார். தற்போது, இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ள புதிய திரைப்படம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் ஹீரோவாக டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்க உள்ளாராம். இதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளாராம்.

இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாக உள்ளதாம். விரைவில் இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, நடிகர் ராம் சரண் நடிப்பில் இயக்குநர் ராஜமௌலியின் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR) மற்றும் நடிகர் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.