வெளியானது போர்கொண்ட சிங்கம் லிரிக் வீடியோ !

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் . இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் படத்தின் மீதான மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பத்தல பத்தல என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மற்ற பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது . இந்நிலையில் போர் கொண்ட சிங்கம் என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது .

நடிகர் கமலின் திரைவாழ்க்கையில் விக்ரம் படம் இன்னொரு மைல்கல்லாக அமையும் என்று கூறப்படுகிறது.மேலும் விக்ரம் படம் மொத்தமாக 2 மணி நேரம் 53 நிமிடங்கள் உள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது . இதனால் மூன்று மணி நேரம் படம் நீளம் இருப்பதால் இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தரும் என்றும் சிலர் கருதுகின்றனர் .

Share.