பரிதாப நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்… வைரலாகும் வீடியோ!

தமிழ் திரையுலகில் தனக்கு தானே பட்டம் கொடுத்து, அதன் மூலமே அதிக கவனம் ஈர்த்த நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். 2011-ஆம் ஆண்டு வெளியான ‘லத்திகா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். அதன் பிறகு சந்தானம் தயாரித்து, நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் காமெடியனாக வலம் வந்தார்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்துக்கு பிறகு ‘ஒன்பதுல குரு, சும்மா நச்சுன்னு இருக்கு, ஆர்யா சூர்யா, ஐ, சகாப்தம், நாரதன், கவண், சிம்பா’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். கடைசியாக யோகி பாபுவின் ‘பேய் மாமா’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் நடிப்பில் ‘முருங்கக்காய்’ மற்றும் ‘பிக்கப் டிராப்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘முருங்கக்காய்’ படத்தை படத்தை இயக்குநர் ஆர்.எஸ்.மணி இயக்குகிறார். ‘பிக்கப் டிராப்’ படத்தை ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் இயக்கி வருவதோடு, அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். இதில் சீனிவாசனுக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். இந்நிலையில், திடீரென ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வரும் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.

Share.