சளார் படக்குழுவை மிரட்டிய பிரபாஸின் தீவிர ரசிகர்!

கே.ஜி.எஃப்.2 படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சலார். இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார் .சலார் படத்திற்கு கடந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதன்பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பிறகு இந்த படத்தை பற்றின அப்டேட் எதுவும் வரவில்லை . இதனால் சோகத்தில் இருந்த நடிகர் பிரபாஸின் ரசிகர் ஒருவர் , சலார் படத்தின் அப்டேட்டை இயக்குனர் பிரசாந்த் நீல், தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸ் தராவிட்டால் இந்த மாதம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார் . அந்த கடிதம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

அந்த கடிதத்தில் ‘சாஹோ, ராதே ஷ்யாம் படங்களின் தோல்வியால் நாங்கள் ஏற்கனவே அதிருப்தியிலும், வேதனையிலும் இருக்கிறோம். சலார் படத்தின் டீசர் குறித்து மே மாதம் அறிவிப்பு வெளியாகும் என்றார்கள்.ஆனால் இதுவரை எந்த அப்டேட்டும் இல்லை. இந்த மாதத்தில் சலார் படத்தின் அப்டேட் வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று அந்த ரசிகர் கூறியுள்ளார்.மேலும் அந்த கடிதத்தின் தலைப்பில் தற்கொலை கடிதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

இந்த கடிதத்தை நடிகர் பிரபாஸ் மற்றும் சலார் படக்குழுவினர்கள் பார்த்தார்களா இல்லையா என்று தெரியவில்லை . இந்த ரசிகரின் அறிவற்ற செயலை பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர் .

Share.