பிரபாஸ் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’… ரிலீஸ் ஒத்தி வைப்பு!

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு மிதூன் – மனன் பரத்வாஜ்ஜும், தமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் வெர்ஷன்களுக்கு ஜஸ்டின் பிரபாகரனும் இசையமைத்துள்ளார்கள். சமீபத்தில், படத்தின் மோஷன் போஸ்டர், Glimpse, டீசர் , பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர்.

இந்த மோஷன் போஸ்டர், Glimpse, டீசர் , பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. முதலில் படத்தை வருகிற ஜனவரி மாதம் 14-ஆம் தேதி பொங்கல் (சங்கராந்தி) ஸ்பெஷலாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டிருந்தனர். தற்போது, படத்தின் ரிலீஸை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.