பிரபாஸ் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இப்படம் இன்று (மார்ச் 11-ஆம் தேதி) திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு மிதூன் – மனன் பரத்வாஜ்ஜும், தமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் வெர்ஷன்களுக்கு ஜஸ்டின் பிரபாகரனும் இசையமைத்துள்ளார்கள்.

இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், ஜெகபதி பாபு, முரளி ஷர்மா, ப்ரியதர்ஷி, பாக்யஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை ‘UV கிரியேஷன்ஸ்’ – ‘T-சீரிஸ் பிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளது. தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.