‘பாகுபலி’ படத்தின் ஹீரோ பிரபாஸ் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபாஸ். இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ரிலீஸான படம் ‘ராதே ஷ்யாம்’. இந்த படத்தை இயக்குநர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோலில் பிரபாஸின் உறவினரும், பாப்புலர் நடிகருமான ‘ரிபெல் ஸ்டார்’ கிருஷ்ணம் ராஜு நடித்திருந்தார்.

கிருஷ்ணம் ராஜு 180 படங்களுக்கு மேல் தெலுங்கில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணம் ராஜு (வயது 83) இன்று இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share.