பிரபாஸின் சயின்ஸ்-ஃபிக்ஷன் படம்… வெளியானது அட்டகாசமான அப்டேட்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் நாக் அஷ்வின் இயக்கும் படம் நடிகர் பிரபாஸின் கேரியரில் 21-வது படமாம். இதனை ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறது. சமீபத்தில், இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தமானார். நடிகர் பிரபாஸ், நடிகை தீபிகா படுகோன் டூயட் பாடி ஆடப்போகும் முதல் படம் இதுதானாம்.

இதில் முக்கிய ரோலில் டாப் பாலிவுட் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு மிக்கி.ஜே.மேயர் இசையமைக்க உள்ளார், டேனி சஞ்செஸ் லோபெஸ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் ஆரம்பிக்கவும், படத்தை 2023-ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யவும் ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் தயாராகப்போகும் இப்படத்தின் கதைக்களம் 2050-ஆம் ஆண்டு நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.