தொடங்கவுள்ள பிரபாஸின் ராதேஷ்யாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு!

பிரபாஸ் நடிப்பில் 4 மொழிகளில் வெளியாகவிருக்கும் அடுத்த திரைப்படம் பிரபாஸ் 20 என்றழைக்கப்பட்ட “ராதே ஷ்யாம்”. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தை இயக்குனர் கே.கே.ராதாகிருஷ்ணா குமார் இயக்கியுள்ளார். யூவி கிரேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

இந்த படம் ஒரு காதல் கதையை மையமாக கொண்ட படம் என்றும், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெட்ஜ் உடனான காதல் யூரோப்பில் நடக்கும்படி அமைந்துள்ளதாகவும், பிரபாஸ் அதிர்ஷ்டம் சொல்லும் நபர் கதாபாத்திரத்திலும், பூஜா ஹெட்ஜ் இளவரசி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் வெளிவரவூள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

இத்தாலியில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அங்கேயே நடக்க உள்ளதாகவும், இதில் கலந்து கொள்வதற்காக தான் தற்போது நடிகர் பிரபாஸ் இத்தாலிக்கு பயணம் செய்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

Share.