மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற பிரபாஸின் குடும்பத்தினர்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

சமீபத்தில், பிரபாஸின் பர்த்டே ட்ரீட்டாக படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். பிரபாஸின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் பிரபாஸின் உறவினரும், பாப்புலர் நடிகருமான கிருஷ்ணம் ராஜு நடித்து கொண்டிருக்கிறார். மேலும், இப்படத்தை ‘டி சீரிஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தனது ‘கோபி கிருஷ்ணா மூவீஸ்’ மூலம் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்களை ரிலீஸ் செய்யப்போவதும் கிருஷ்ணம் ராஜு தான். தற்போது, கிருஷ்ணம் ராஜு தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

1

2

3

4

5

6

7

8

9

10

11

Share.