பிரபாஸின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘சலார்’-யில் ‘அண்ணாத்த’ கனெக்ஷன்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சலார்’ படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது.

‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோ பிரபாஸுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மது குருசுவாமி நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், இப்படத்தை அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக இயக்குநர் பிரஷாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் செம்ம மாஸான போஸ்டரை வெளியிட்டு அறிவித்தார். தற்போது, இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் நடிக்க பாப்புலர் நடிகர்களில் ஒருவரான ஜெகபதி பாபு ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜெகபதி பாபு ரஜினியின் ‘அண்ணாத்த’-யில் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share.