‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் – பிரபாஸ் காம்போவில் ‘சலார்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சலார்’ படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கான பூஜை கடந்த ஜனவரி 15-ஆம் தேதி போடப்பட்டது.

கடந்த ஜனவரி 29-ஆம் தேதி முதல் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தை அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இப்படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீலே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், செம்ம மாஸான புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

இந்த செம்ம மாஸான புதிய போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோ பிரபாஸுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மது குருசுவாமி நடித்து வருகிறார்.

Share.