விஜய்யுடன் இணையும் பிரபுதேவா !

பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் வம்ஷி இயக்கத்தில் அவரது 66-வது படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க வருகிறார் . இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் . இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இருப்பதாக தமன் கூறியிருக்கிறார் .பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார் .

மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா என நட்சத்திர பட்டாளமே நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது . நடிகர் விஜய் பல வருடங்களுக்கு பிறகு குடும்ப படத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கு அனைத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது .


இந்நிலையில் தளபதி 66 படத்தில் பிரபுதேவா இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்ற உள்ளார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது . ஏற்கனவே பிரபுதேவா நடிகர் விஜய்யை வைத்து போக்கிரி மற்றும் வில்லன் படத்தை இயக்கி உள்ளார் . போக்கிரி பொங்கல் பாடலுக்கு இருவரும் இணைந்து நடனமாடியது ரசிகர்களால் கொண்டப்பட்டது . இதனால் இந்த பாடலுக்கும் பிரபுதேவா சிறப்பாக நடனம் அமைப்பார் என்று அனைவராலும் நம்பப்படுகின்றது .

Share.