விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண பிரபு தேவா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ இந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நேருக்கு நேர்’. 1997-யில் ரிலீஸான இந்த படத்தில் ‘தளபதி’ விஜய்யுடன் இணைந்து சூர்யாவும் நடித்திருந்தார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வஸந்த் இயக்கியிருந்தார். இதில் சூர்யா நடித்திருந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் வஸந்த் பிரபல நடிகர் பிரபு தேவாவை அணுகினாராம். அப்போது சில காரணங்களால் பிரபு தேவாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.