‘சைக்கோ ராஜா’வாக பிரபு தேவா… வெளியானது ‘பஹீரா’ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் பிரபு தேவா. இவர் நடிப்பில் ரெடியாகியுள்ள புதிய மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானர் படம் ‘பஹீரா’. இந்த படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறாராம்.

இதில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என ஏழு ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய ரோல்களில் சாய் குமார், நாசர், பிரகதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘பரதன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில், படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்நிலையில், இன்று இந்த படத்தின் மிரட்டலான ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

Share.