பிரபு தேவா – வரலக்ஷ்மி – ரைசா நடிக்கும் ‘பொய்க்கால் குதிரை’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் பிரபு தேவா. இவர் நடிப்பில் ரெடியாகி வரும் புதிய படத்துக்கு ‘பொய்க்கால் குதிரை’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நடிகர் பிரபு தேவாவே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. இந்த படத்தை ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மூலம் ஃபேமஸான இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி வருகிறார்.

இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரைசா வில்சன் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில், ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். இதனை ‘டார்க் ரூம் பிக்சர்ஸ் – மினி ஸ்டுடியோ’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

Share.