வாவ் வேற லெவல்… பிங்க் கலர் காஸ்டியூமில் ரசிகர்களை சொக்க வைத்த பிரணிதா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிரணிதா சுபாஷ். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே அருள்நிதியுடன் தான். அது தான் ‘உதயன்’. இந்த படத்தை இயக்குநர் சாப்ளின் இயக்கியிருந்தார். ‘உதயன்’ படத்துக்கு பிறகு நடிகை பிரணிதா சுபாஷுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ என தமிழ் படங்கள் குவிந்தது. பிரணிதா சுபாஷ் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

Pranitha Subhash's New Video1

இப்போது பிரணிதா சுபாஷ் நடிப்பில் கன்னட மொழியில் இரண்டு படங்களும், ஹிந்தி மொழியில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த மே 30-ஆம் தேதி பெங்களூரில் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை பிரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பிரணிதா சுபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.