‘கொரோனா’ தடுப்பூசி போடும்போது சினேகா செய்த அலப்பறை… வைரலாகும் வீீடியோ!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசன்னா. இவர் அறிமுகமான முதல் படமே முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னமின் தயாரிப்பில் அமைந்தது. அந்த படம் தான் ‘ஃபைவ் ஸ்டார்’. இந்த படத்தை இயக்குநர் சுசி கணேசன் இயக்கியிருந்தார். அதன் பிறகு 2004-ஆம் ஆண்டு வெளியான ‘அழகிய தீயே’ என்ற படம் சூப்பர் ஹிட்டாகி, பிரசன்னாவின் நடிப்புக்கும் லைக்ஸ் போட வைத்தது.

‘அழகிய தீயே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு பிரசன்னாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. 2012-ஆம் ஆண்டு பிரபல நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரசன்னா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

தற்போது, நடிகர் பிரசன்னாவும், அவரது மனைவியும், நடிகையுமான சினேகாவும் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை பிரசன்னாவே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், சினேகாவுக்கு தடுப்பூசி போடும்போது எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

1

2

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

 

View this post on Instagram

 

A post shared by Prasanna_actor (@prasanna_actor)

Share.