விக்ரம் படத்தை பார்த்த பிரசாந்த் நீல் !

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்,சூர்யா , விஜய் சேதுபதி ,ஃ பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது . உலகம் முழுக்க இந்த படம் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது . பல இடங்களில் இந்த படம் புதிய சாதனை செய்து வருகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூலை நிகழ்த்தி உள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தை பார்க்க ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள் . இதனிடையே விக்ரம் படத்தின் ஓ.டி.டி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கி இருந்தது . கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .திரையரங்கில் படத்தை பார்க்காத இயலாத சினிமா நட்சத்திரங்கள் ஓ.டி.டியில் படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

அந்த வகையில் கே.ஜி.எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் விக்ரம் படத்தை பார்த்து விட்டு படக்குழுவை பாராட்டி உள்ளார் .நடிகர்கள் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி ,ஃபகத் பாசில் , உள்ளிட்ட நடிகர்களை ஒன்றாக திரையில் காண்பது விருந்தாக இருக்கிறது என்றும் இயக்குனர் லோகேஷ் அவர்களின் பணிகளுக்கு நான் அபிமானி என்றும் கூறியுள்ளார் . மேலும் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சண்டை இயக்குனர்கள் அன்பறிவு ஆகியோரையும் பாராட்டி உள்ளனர் .

மேலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் தாக்கத்திலிருந்து தன்னால் வெளியே வர இயலவில்லை என்றும் பதிவிட்டுள்ளார் .

Share.