அடேங்கப்பா… ‘ப்ரேமம்’ நிவின் பாலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நிவின் பாலி. இவருக்கு அமைந்த முதல் மலையாள படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்’. அதன் பிறகு சில மலையாள படங்களில் நடித்த நிவின், ‘நேரம்’ என்ற பைலிங்குவல் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார்.

பின், 2015-ஆம் ஆண்டு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘ப்ரேமம்’ (மலையாளம்) படத்தில் ஜார்ஜ் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து அதிக கவனம் ஈர்த்தார். ‘ப்ரேமம்’ படத்துக்கு பிறகு நிவின் பாலிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் மலையாள படங்கள் குவிந்தது. மேலும், ‘ரிச்சி’ என்ற நேரடி தமிழ் படத்திலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் நிவின் பாலி.

2010-ஆம் ஆண்டு ரின்னா ஜாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நிவின் பாலி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இப்போது நிவின் பாலி நடிப்பில் ஐந்து மலையாள படங்களும், ஒரு தமிழ் படமும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் தமிழ் படத்தை பாப்புலர் இயக்குநர் ராம் இயக்குகிறார். இதில் நிவினுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இந்நிலையில், நடிகர் நிவின் பாலியின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.