தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படம்… தனுஷுக்கு ஜோடி யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நேற்று (ஜூன் 18-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் ரிலீஸ் ஆனது. இதனைத் தொடர்ந்து தனுஷ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாகவும் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்க உள்ளாராம்.

இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளதாம். இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP’ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது, இதில் தனுஷுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, ‘மாரி 2’ படத்தில் தனுஷ் – சாய் பல்லவி இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.