“விஜய் சார் ‘ப்ரேமம்’ பார்த்துட்டு எனக்கு போன் பண்ணாரு”… ‘ப்ரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சொன்ன சூப்பரான தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ‘நேரம்’ (தமிழ் / மலையாளம்), ‘ப்ரேமம்’ (மலையாளம்) ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனிடம் ரசிகர் ஒருவர் ஃபேஸ்புக்கில் “சார் நீங்க விஜய் சாரை வச்சு ஒரு காதல் கதையை எடுங்க. கண்டிப்பா அந்த படம் ஆடியன்ஸுக்கு பிடித்து மிகப் பெரிய ஹிட்டாகும்” என்று கூறியிருந்தார்.

அதற்கு அல்போன்ஸ் புத்திரன் “எனது ‘ப்ரேமம்’ ரிலீஸுக்கு பிறகு, படத்தை பார்த்துவிட்டு தமிழ்நாட்டில் இருந்து வந்த முதல் போன் கால் விஜய் சாரிடமிருந்து தான். அதன் பிறகு நான் அவரை நேரில் சந்தித்தும் பேசினேன். கண்டிப்பா விஜய் சார் என்னை ஒரு நாள் கூப்பிட்டு படம் பண்ண சொல்லுவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஐ அம் வெயிட்டிங்” என்று பதில் அளித்துள்ளார்.

Share.