டான் படத்தின் டப்பிங் உரிமை எத்தனை கோடி ?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான படம் டான் .இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் . S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . நடிகர் சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளார் .பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருந்தது .

இந்நிலையில் படம் திரை அரங்கில் மே 13-ஆம் தேதி வெளியானது . படம் வெளியான முதல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி உள்ளனர் . பொதுவான ரசிகர்களும் , சினிமா ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி இருந்தனர் .சிவகார்த்திகேயன் அவர்களின் திரைப்பயணத்தில் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது .

டான் படம் 100 கோடி வசூல் செய்து பெரிய அளவில் சாதனை புரிந்து உள்ளது .இயக்குனர் சிபி சக்கரவர்த்தி நடிகர் ரஜினி அவர்களை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது .இந்நிலையில் டான் திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை 5 கோடி ரூபாய்க்கு விற்று உள்ளார் .

Share.