ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற ப்ரியா பவானி ஷங்கர்… தொடை தெரிய போஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளர், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் நடிகை என வலம் வந்தவரை ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. அது தான் ‘மேயாத மான்’. ‘மேயாத மான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து ‘கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா : அத்தியாயம் ஒன்று, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஹாஸ்டல், குருதி ஆட்டம், யானை, திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களிலும், ‘டைம் என்ன பாஸ், விக்டிம்’ ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இப்போது நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’, சிலம்பரசனின் ‘பத்து தல’, கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’, ஜெயம் ரவியின் ‘அகிலன்’ என 5 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஜெர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ப்ரியா பவானி ஷங்கரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்ததுடன், அங்கு எடுத்த ஸ்டில்ஸையும் வெளியிட்டுள்ளார்.

Share.