ஸ்கை டைவிங் செய்த ப்ரியா பவானி ஷங்கர் !

ரத்ன குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் மேயாத மான் . இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர் ,மாஃபியா , ஹாஸ்டல் என பல படங்களில் நாயகியாக நடித்து இருக்கிறார். இவர் சின்னத்திரையில் நடிக்கும் காலத்திலே இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது‌.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான ஹாஸ்டல் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆரம்பத்தில் நல்ல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பெரிய அளவில் சிறந்த கதையை தேர்ந்த நடிப்பதில் சற்று தடுமாறி வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் இவர் நடிப்பில் யானை படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .யானை படத்தில் தனக்கான கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்றும் ஹரி அவர்களின் படத்தில் கண்டிப்பாக கதாநாயகிகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று யானை படத்தில் நடித்தேன் என்று தெரிவித்து இருந்தார் .

சமீபத்தில் ப்ரியா பவானி அயல் நாட்டிற்கு சுற்றுலா சென்று உள்ளார் . அங்கிருந்து தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் .இந்நிலையில் தற்போது ப்ரியா பவானி ஷங்கர் ஸ்கை டைவ் செய்து உள்ளார் . அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .

Share.