சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிப்பது குறித்து பேசிய பிரியங்கா !

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டாக்டர் . இந்த படத்தை தொடர்ந்து டான் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் . S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . நடிகர் சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளார் . இயக்குனர் கவுதம் வாசுதேவ் இந்த படத்தில் சிறப்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது . டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் .ஏற்கனவே டாக்டர் படத்தில் பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார் .
இந்த ஜோடிக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து இருந்தார்கள் .


வருகின்ற மே 13-ஆம் தேதி வெளியாகும் நிலையில் பிரியங்கா அருள் மோகன் படத்தை பற்றி பேசி உள்ளார். அதில் ஒரு பெரிய ஹீரோ உடன் மீண்டும் மீண்டும் படம் நடிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. ஆனால் எனக்கு கிடைத்துள்ளது. என்னிடம் ஏதோ திறமை உள்ளது என்று நம்பி இந்த வாய்ப்பை வழங்கி உள்ளனர். நிச்சயம் மகிழ்ச்சியான விஷயம், ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்றும் இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வேன் என்றும் கூறியுள்ளார் . மேலும் ‛டான்’ திரைப்படம் படம் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த நல்ல படமாக இருக்கும்” என்று பேசி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது .

Share.