கணவருக்கு முத்தம் கொடுத்த பிரியங்கா சோப்ரா … வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் அறிமுகமான முதல் தமிழ் படத்தின் ஹீரோவே ‘தளபதி’ விஜய் தான். அது தான் ‘தமிழன்’ திரைப்படம். அதன் பிறகு பாலிவுட்டிற்கு சென்ற பிரியங்கா சோப்ராவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ஹிந்தி படங்கள் குவிந்தது.

பிரியங்கா சோப்ரா ஹிந்தி மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் சில ஹாலிவுட் படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் தன்னை விட 10 வயது சிறியவரான அமெரிக்க பாப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸை 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஆண்டு (2022) ஜனவரி 21-ஆம் தேதி பிரியங்கா சோப்ரா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “வாடகைத் தாய் மூலம் நானும், நிக் ஜோனஸும் பெற்றோர் ஆகியுள்ளோம்” என்று ஹேப்பியாக ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். சமீபத்தில், பிரியங்கா சோப்ரா தனது மகளுக்கு ‘மால்தி மேரி சோப்ரா ஜோனஸ்’ (Malti Marie Chopra Jonas) என பெயர் சூட்டினார். இந்நிலையில், கணவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கும் ஸ்டில்ஸை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Share.