பிரியங்கா மோகனுக்கு இது ரொம்ப முக்கியமாம் !

டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன் . இந்த படத்தை இயக்கி இருந்தார் நெல்சன் திலீப்குமார் . நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார் . இந்த படத்தில் பிரியங்கா மோகனின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகை பிரியங்கா அருள் மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து இருந்தார் .

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கும் அடுத்த படத்தின் செய்தி வெளியாக இருந்தது .
M.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வணக்கம் டா மாப்பிள்ளை . இயக்குனர் M.ராஜேஷ் இயக்கிய வணக்கம் டா மாப்பிள்ளை , மிஸ்டர் லோக்கல் , கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் நடிகை ப்ரியங்கா மோகனிடம் எந்த மூன்று விஷயம் இல்லாமல் உங்களால் வாழ முடியாது என்று கேள்விக்கு சாப்பாடு , தண்ணீர் மற்றும் போன் ஆகிய மூன்றாம் இல்லாமல் என்னால் வாழ இயலாது என்று தெரிவித்துள்ளார் .

Share.