தனுஷ் செய்தது சரியா ?

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை சென்று தமிழ் நடிகனாக அசத்தி இருக்கிறார்.

சமிபத்தில் இவர் நடித்த ஹாலிவுட் படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்நிலையில் நடிகர் தனுஷ் ஒரு தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே சூட்டிங் மொத்தமாக முடிய 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நேரத்தில் பாலிவுட் பட வாய்ப்பு வந்ததும் இந்த படத்தை ஓரம் கட்டிவிட்டு நடிக்க சென்றுவிட்டார் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

இவரை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளரின் நிலை என்ன? இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம், இப்படி எல்லாம் செய்யலாமா? இது தயாரிப்பாளருக்கு செய்யும் துரோகமல்லவா என தனுஷை கடுமையாக பேசியுள்ளார் ராஜன்.மேலும் இது பிரச்சனைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காண வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Share.