வாரிசு பட தயாரிப்பாளருக்கு பிறந்த வாரிசு !

நடிக்கும் விஜய் தனது அவரது 66-வது படமான வாரிசு படத்தின் நடித்து வருகிறார் . இந்த படத்தை தோழா படத்தை இயக்கிய வம்ஷி இயக்கி வருகிறார் . நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . சரத்குமார் , பிரகாஷ்ராஜ் , பிரபு , குஷ்பூ , சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வருகிறார் . இவர் ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தையும் தயாரித்து வருகிறார் .

 


இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜூவிற்கு 2020ம் ஆண்டு வைகா ரெட்டி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. தில் ராஜுவின் முதல் மனைவி அனிதா உடல் நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்ததால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் தில் ராஜூ.

கர்ப்பமடைந்திருந்த வைகா இன்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தையை நலமுடன் பெற்றெடுத்தார். விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கு ஆண் வாரிசு பிறந்ததால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜூ .

Share.