இளம் இயக்குநருக்கு 2 டாப் ஹீரோக்கள் கொடுத்த கிரீன் சிக்னல்… ஆனா, ட்விஸ்ட் வைத்த தயாரிப்பாளர்!

‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பு கடந்த ஆண்டு (2020) வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தை இயக்கியவர் தான் அந்த இயக்குநர். இந்த படம் தான் இவரின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவரின் மகன் தான் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த படத்தை பார்த்து ரசித்த தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ, அந்த இயக்குநருக்கு போன் செய்து வெகுவாக பாராட்டினார். அதுமட்டுமின்றி, “தனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுங்க” என்று சொல்லி விட்டார். அந்த முன்னணி ஹீரோவின் தீவிர ரசிகரான இந்த இயக்குநர் சும்மா இருப்பாரா? அவருக்கென ஒரு சூப்பர் கதையை ரெடி செய்து அவரிடம் சொல்லியிருக்கிறார்.

முன்னணி ஹீரோவுக்கும் கதை பிடித்துவிட, உடனே கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். இதற்கிடையில் ‘வாத்தி’ பட ஹீரோவுக்கும் வேறு ஒரு கதையை சொல்லி அசத்தியிருக்கிறார் அந்த இயக்குநர். இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கும் ‘வாத்தி’ நடிகரும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். ஆனால், இந்த 2 டாப் ஹீரோக்களுக்கும் முன்பு ஒரு வளர்ந்து வரும் தயாரிப்பளர் படம் இயக்குவதற்காக இந்த இயக்குநருக்கு ரூ.35 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம்.

தற்போது, அந்த தயாரிப்பாளர் இந்த இயக்குநரிடம் “நீங்கள் கதை சொல்லி ஓகே பண்ணியிருக்கும் இரண்டு முன்னணி நடிகர்களில் யாரை வைத்து நீங்கள் படம் பண்ணினாலும், அதை நம்ம பேனரில் தான் பண்ண வேண்டும்” என்று சொல்கிறாராம். அந்த இயக்குநரோ “பெரிய ஹீரோக்கள் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுக்கு தான் கால்ஷீட் கொடுப்பார்கள். நான் உங்களிடம் வாங்கிய அட்வான்ஸை வட்டியுடன் திருப்பி கொடுத்து விடுகிறேன்” என்று தயாரிப்பாளரிடம் சொல்லியிருக்கிறார் ஆனால், தயாரிப்பாளரோ சொன்னதையே திரும்ப சொல்லி அடம்பிடிக்கிறாராம்.

Share.