தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு கொரோனா பாசிட்டிவ்!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஐசரி கணேஷ் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தேவி, போகன், ஜூங்கா, எல்கேஜி, கோமாளி, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ள ஐசரி கணேஷ், அடுத்து வெளிவரவுள்ள துருவ நட்சத்திரம், ஜோஷ்வா இமைபோல் காக்க, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

நேற்று பிரபல காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காலமான நிலையில், தற்போது மேலும் ஒரு பிரபலமான தயாரிப்பாளருக்கு கொரோனா வந்துள்ளது.

தொடர்ந்து சினிமா துறையை சார்ந்த பலருக்கு தற்போது கொரோனா பாசிட்டிவாக இருந்து வருகிறது. மேலும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்னும் ஒரு கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share.