புகை பிடிக்கும் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி !

தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்தா’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.

மங்காத்தா படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது .சமீபகாலமாக இவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்பு இல்லை . அதன் பிறகு இந்தி சினிமாவுக்கு நடிக்க தொடங்கினர் . இந்தியில் ராய் லட்சுமி முதன் முதலில் நடித்த ‘ஜூலி-2’ திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. சமூக வலைத்தளங்களில் இவர் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் . பல போட்டோஷூட்டுகளை எடுத்துக் கவர்ச்சி புகைப்படங்களை ராய் லட்சுமி வெளியிட்டு வருகிறார்.

தற்போது கையில் சிகரெட்டுடன் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நம்ம மாஸ் ஸ்டையில் செய்யும் போது அதை ஏன் வேறு வழியில் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Share.