பொன்னியின் செல்வன் படத்திற்காக இணையும் ரஜினி மற்றும் கமல் !

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து உள்ளார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு படத்தின் விளம்பர படுத்தும் பணிகளை துவங்கி உள்ளது அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ,கார்த்தி ,த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் சரத்குமார் , பார்த்திபன் ஆகியோரின் ஸ்டில்ஸை வெளியீட்டு இருந்தனர் .அதனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு , பிரபு , பிரகாஷ் ராஜ் , லால் , ஆகியோரின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் .

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தது இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன . இந்நிலையில் நாளை நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் இசை வெளியிட்டு விழா நடக்க இருக்கிறது . இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள போகிறார்கள் . இதனை லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது . இதனால் ரஜினி மற்றும் கமலை ஒரே மேடையில் பார்க்க ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

Share.