விஜயகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்திய ரஜினி மற்றும் கமல் !

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த் . தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் . நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து பல நல்ல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடித்தவர் . அதன் பிறகு அரசியல் கட்சி ஆரம்பித்து அதிலும் பெயர் சொல்லும்படியான வெற்றியை பெற்றார் . அதன் பிறகு இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் முன்பு அரசியில் களத்தில் முன்பு போல் செயல்பட முடியவில்லை . உடல்நலக்குறைவால் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். இதனால் இவரால் அரசியல் மற்றும் கட்சி தொடர்பான பணிகளில் முன்பு போல் செயல்பட
முடியவில்லை.

இந்நிலையில் திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த் . விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அறுவை சிகிச்சை மூலம் காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது .

இந்நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வாழ்த்தி உள்ளனர் . நடிகர் ரஜினிகாந்த் ” என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என ட்வீட் செய்துள்ளார் ” .

நடிகர் கமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் என ட்வீட் செய்துள்ளார் .

Share.