ரஜினி மற்றும் விஜய் தான் ரோல் மாடல் !

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தனது சொந்த ஷாப்பிங் ஸ்டோர் விளம்பரத்திற்காக பிரபல நடிகைகள் ஹன்சிகா மோத்வானி மற்றும் தமன்னாவுடன் நடித்து பிரபலமடைந்தார். சரவணா ஸ்டோர்ஸின் விளம்பர வீடியோக்களில் பிரபல நடிகையுடன் நடித்ததற்காக ஆன்லைனில் இவர் ட்ரோல் செய்யப்பட்டார் . ஆனால் அது அவரையும் அவரது கடையையும் பிரபலமாக்கியது.

2019 ஆம் ஆண்டில், பெயரிடப்படாத கோலிவுட் திரைப்படத்தில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவர் அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியது . தி லெஜெண்ட் என்ற அந்த படத்தின் பெயர் என்று உறுதியானது . இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார் . இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளது .

இந்நிலையில் படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா கடந்த 29-ஆம் தேதி நடந்து முடிந்தது .
இந்த விழாவில் பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா , மேலும் நடிகைகள் தமன்னா , ஹன்சிகா , ராய் லட்சுமி , ஷ்ரதா ஸ்ரீநாத் , ஸ்ரீ லீலா ,ஊர்வஷி ரௌட்டலா என பல முன்னணி நடிகைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சரவணன் நடிப்பில் தனது ரோல் மாடலாக ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை கூறியிருக்கிறார்.
மேலும் படத்தின் டிரைய்லர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

Share.