ஜனாதிபதி மற்றும் பிரதமரை நேரில் சந்தித்த ரஜினி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்த ஆண்டு (2021) ஏப்ரல் 1-ஆம் தேதி இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில் “மத்திய அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ள திரையுலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை என்னை உருவாக்கிய என்னுடைய குருநாதர் திரு.கே.பாலச்சந்தர் சார் அவர்களுக்கும், என்னுடைய அண்ணன் திரு.சத்யநாராயண ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னுடைய நண்பர் திரு.ராஜ் பகதூர் அவர்களுக்கும்,

என்னுடைய திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், என்னுடைய ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று (அக்டோபர் 27-ஆம் தேதி) ரஜினி ட்விட்டரில் “மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும், பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

Share.