சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிக்கும் ‘SK 21’… இதற்காக ரஜினி பட டைட்டிலை கைப்பற்றிய கமல்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’ மற்றும் இயக்குநர் அனுதீப் கேவி படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். இந்த படத்தை ‘சோனி பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மூலம் தயாரிக்கிறாராம்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ படம் மூலம் ஃபேமஸான சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார். சிவகார்த்திகேயனின் கேரியரில் 21-வது படமான இதன் ஷூட்டிங்கை மிக விரைவில் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்துக்கு ‘மாவீரன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதே டைட்டிலில் 1986-ஆம் ஆண்டு வெளியான படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.