ரஜினி – பசுபதி இணைந்து நடித்த ‘குசேலன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார்.

‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் 2008-ஆம் ஆண்டு வெளியான படம் ‘குசேலன்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பி.வாசு இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் பசுபதி, மீனா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, லிவிங்க்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.8 கோடி வசூல் செய்ததாம்.

Share.