மறக்க முடியாத நிகழ்வு – விக்னேஷ் சிவன் !

போடா போடி படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இதை தொடர்ந்து நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் , போன்ற படங்களை இயக்கி இருந்தார் ‌. இவர் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் படத்தை இயக்க உள்ளார்‌.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் அஜித் படத்தின் கதை பற்றி பேசி இருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.அஜித் நடித்த வாலி மற்றும் மங்காத்தா படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மங்காத்தா படத்தின் இடைவேளை காட்சி அஜித் மட்டுமே அந்த சீனில் நடித்திருப்பார். மிக அற்புதமான நடிப்பை நடிகர் அஜித் கொடுத்திருப்பார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ளது .

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனை தொலைபேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,”நிகழ்ச்சியை குறித்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி சூர்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார். உங்கள் குரலை கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் வருகையினால் அந்த நிகழ்ச்சி இன்னும் அழகானது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மாஸ்டர் பிருந்தா செஸ் ஒலிம்பியாட் டீசர் மேக்கிங் வீடியோவை பகிர்ந்து செஸ் ஒலிம்பியாட் குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.