தர்பார் படத்தில் ரஜினியின் சம்பளம் ?

தமிழ் சினிமாவில் நாற்பது வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை .

ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்து தனது அடுத்த படமான ‘ஜெயிலர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் .படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் .

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான படம் தர்பார் . இந்த படத்தை முருகதாஸ் இயக்கி இருந்தார் . நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருந்தார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை . நடிகர் ரஜினி இந்த படத்துக்கு 108 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது .

Share.