“அண்ணாத்த படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்துச்சு” … ரஜினி கொந்தளித்து வெளியிட்ட பரபரப்பு ஆடியோ!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது.

ரஜினிக்கு எதிராக மோதும் வில்லன் ரோல்களில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பாலா, சதீஷ், சூரி, சத்யன், வேல ராமமூர்த்தி, அர்ஜை, ‘கபாலி’ விஸ்வநாத், லிவிங்க்ஸ்டன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது, நடிகர் ரஜினி ஹூட் ஆப்பில் இயக்குநர் சிவாவை பாராட்டியும், ‘அண்ணாத்த’ படத்துக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

Share.